News September 21, 2025

நெல்லை மக்களே., இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

image

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பாபநாசம் சிவன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News September 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.21] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News September 21, 2025

நெல்லை: மாணவிக்கு பாலியல் தொல்லை: வார்டன் கைது

image

மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் 14 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆண் வார்டன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின் வார்டன் அபூபக்கர் (46) மற்றும் உடந்தையாக இருந்த பெண் வார்டன் வகிதா என்ற வசந்தி( 43) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

News September 21, 2025

நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

நெல்லை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!