News September 21, 2025
கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News September 21, 2025
கரூர்: 72000 சம்பளத்தில் வேலை!

கரூர் மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 21, 2025
இளைஞர்கள் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டமும், தென்மண்டலத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியமும் இணைந்து நடத்துகின்றன. மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அக்.18-க்குள் https://nats.education.gov.in/ இணையத்தில் பதியவேண்டும்.
News September 21, 2025
கரூர்: பாஜக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு

கரூர் மாவட்டம், கரூர், மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் இன்று ( 21. 09. 2025 ) அமைச்சர் நாயனார் நாகேந்திரன் ஆலோசனைப்படி, கரூர் பாஜக தலைவர் வி வி செந்தில்நாதன் அவர்கள் கீழ்க்கண்ட பொறுப்புகளை பாஜக நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார். கிருஷ்ணராபுரம் பெருமாள் இளைஞர் அணி, கரூர் மேற்கு ஒன்றியம் பிரியா ஈஸ்வரன் மகளிர் அணி, கா பரமத்தி வடக்கு ஒன்றியம் தங்கதுரை பட்டியல் அணி பொறுப்பு வழங்கள்