News September 21, 2025

ஒரு மாதம் பணிபுரிந்தாலும் பென்ஷன் பெறலாம்

image

EPF பென்ஷன் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு EPFO விதிவிலக்கு அளிக்கிறது. இதன்படி, BPO, லாஜிஸ்டிக்ஸ் (அ) ஒப்பந்த முறையில் தற்காலிக வேலை செய்பவர்கள் ஒரு மாதம் பணிபுரிந்தாலே EPF பென்ஷன் பலன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வேலைகளில் பணிபுரிவோருக்கு EPF அக்கவுண்ட் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Similar News

News September 21, 2025

BREAKING: கூட்டணிக்கு வர விஜய்க்கு அழைப்பு

image

திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், விஜய் அதிமுகவுடன் இணைய வேண்டும் என கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விஜய் தனித்து போட்டியிட்டால் திமுக தவெகவை அழித்துவிடும் என எச்சரித்த அவர், அதிமுகவின் பலம், அரசியல் அனுபவம் விஜய்க்கு தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால் தான் அவரால் தேர்தலில் பாஸ் மார்க் வாங்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News September 21, 2025

அக்சருக்கு பதில் இவர்தான்! இந்தியா பிளேயிங் XI!

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்குகிறது. ஓமனுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்த நிலையில், அவர் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா பிளேயிங் XI குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அபிஷேக் சர்மா, சஞ்சு, கில், SKY, திலக் வர்மா, ஹர்திக், துபே, அர்ஷ்தீப்/ராணா, பும்ரா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப்.

News September 21, 2025

தனுஷால் மீண்டும் ஹாட் டாபிக்கான ஆன்லைன் ரிவ்யூஸ்

image

9 மணிக்கு ரிலீஸாகும் படத்திற்கு 8 மணிக்கே வரும் ரீவ்யூவை பார்க்காதீர்கள், படத்தை பார்த்துவிட்டு நீங்களே (ரசிகர்கள்) வெற்றியை தீர்மானியுங்கள் என ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் கூறியுள்ளார். திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட் படியேறியும், ‘கருத்து சுதந்திரம்’ என கூறி மறுக்கப்பட்டது. படங்களின் உடனடி ரிவ்யூ குறித்த உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!