News September 21, 2025
ராணிபேட்டை: புரட்டாசி அமாவாசையில் இதை செய்யுங்க!

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். ராணிப்பேட்டையில் பாலாற்றின் கரைகள், பனப்பாக்கம் அணை, ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர்!
Similar News
News November 10, 2025
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News November 9, 2025
ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க


