News April 12, 2024
தருமபுரி: கலெக்டர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17.4.2024 அன்று காலை 10 மணி முதல் வாக்களிக்கும் நாளான 19.4.24 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News September 19, 2025
தருமபுரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அரிமா சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான இலவச கண்புரை பரிசோதனை முகாம் நாளை(செ.20) சனிக்கிழமை அன்று கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 19, 2025
தர்மபுரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News September 19, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (செப்.18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!