News September 21, 2025

சுவாரஸ்யமான இந்தியா

image

இந்தியா என்பது பல அதிசயங்கள் கொண்ட நாடு. இந்தியாவைப் பற்றி அறிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதில், சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. மேலும், உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான விஷயத்தை கமெண்ட்ல சொல்லுங்க. நமது நாட்டின் பெருமையை ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 21, 2025

ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதா?

image

ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட்ஸ் வைத்திருந்தாலும், சிலவற்றை நாம் யூஸ் பண்ண மாட்டோம். இந்த யூஸ் பண்ணாத அக்கவுண்ட்ஸ் மூலம் PF, இன்சூரன்ஸ் சேவைகள், ATM, UPI போன்றவற்றை பயன்படுத்த முடியாது. ஆனால், கட்டாயம் இதில் தான் யூஸ் செய்ய வேண்டுமென்றால், அபராத தொகை செலுத்தி, அக்கவுண்ட்டை மீண்டும் Active செய்ய வேண்டியிருக்கும். எனவே, யூஸ் ஆகாது என கருதும் அக்கவுண்ட்டை Close செய்வதே நல்லது.

News September 21, 2025

தவெகவை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்: விஜய்

image

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகி வரும் அங்கீகாரத்தை கண்டு பலர் அஞ்சி நடுங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் பரப்புரையில் பங்கேற்ற அனைவருக்கும் X பதிவில் நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழக மக்களுக்கான முதன்மை சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.

News September 21, 2025

விபத்தில் சிக்கினார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்

image

பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். மூணாறு அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது, ஜீப் கவிழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். அவருடன் பயணித்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!