News September 21, 2025
கோவை: +2 போது ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் பணிக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.23ம் தேதிக்குள் <
Similar News
News September 21, 2025
கோவை: நீரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் தடுப்பணை பகுதியில், ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆம்புலன்ஸ் உதவியுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 21, 2025
கோவை மக்களே: வியாபாரம் செய்ய வங்கி கடன்!

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 22.09.2025 முதல் 26.09.2025 வரை சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம் நடைபெறுகிறது. ரூ.15,000 கடன் பெற புதிதாக விண்ணப்பிப்போரும், முன்பு விண்ணப்பித்து கடன் பெறாதவர்களும் ஆதார், வியாபாரிகள் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உடன் கலந்து கொள்ளலாம் என கோவை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
News September 21, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கோவையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.