News September 21, 2025
இந்த ஒரு மீன் போதும்.. ஹார்ட் அட்டாக்கே வராது

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் சர்வசாதாரணமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனை தடுக்க சால்மன் வகை மீன்களை சாப்பிடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மீன்களில் அதிகமாக ஒமேகா 3, புரதம், வைட்டமின் டி, பி12, செலினியம் இருப்பதால் இதய பிரச்னைகள் வரும் அபாயம் குறைக்கிறதாம். எனவே Red Meat-க்கு பதிலாக இவ்வகை மீன்களை உண்ணலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரா டிடிவி?

NDA-வில் இருந்து வெளியேறிய தினகரன், தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில், 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட வரும் தேர்தலில் விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்படி இவர், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது, தவெகவுடனான கூட்டணி அச்சாரமாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?
News September 21, 2025
GOOD NEWS.. விலை ₹8,000 வரை குறைந்தது

GST சீர்திருத்தத்தை அடுத்து, பல்வேறு பொருள்களின் விலையை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அந்த வகையில், AC, டிஷ்வாஷர் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி, AC விலை ₹4,500 வரையிலும், டிஷ்வாஷர் ₹8,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Daikin 1 டன் 3 star AC ₹50,700-லிருந்து ₹46,730-க்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
News September 21, 2025
முதல்முறை குடிச்சப்போ முடியல: பாபநாசம் நடிகை

தான் முதல்முறையாக மது அருந்தியபோது தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நடிகை எஸ்தர் அனில் கூறியுள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த இவரை, கடைசியாக ‘மின்மினி’ படத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தனது மது பழக்கம் குறித்து மனம் திறந்த அவர், முதல்முறை குடித்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு நாள் முழுவதும் தூங்கியதாகவும், அதன்பின் குடியை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.