News September 21, 2025
கடலூர்: தாய்-மகள் கொலை; அதிரடி தீர்ப்பு

புதுச்சேரியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி விஜயலட்சுமி (48) மற்றும் மகள் மாதங்கியை (24), கடந்த 1.3.2021 அன்று கடலூர் சிங்கிரிகுடியில் வைத்து இளநீர் வியாபாரி இருசப்பன் (49) என்பவர் நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருசப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குலசேகரன் நேற்று உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233170>>பாகம்<<>>-2)
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
தமிழக அரசால் நூலகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது

3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. டெண்டர் முடிவுற்ற பிறகு தமிழக அரசால் முழு விபரமும் தெரிவிக்கப்படும்


