News September 21, 2025
கரூர் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று!

கரூர் மாவட்டத்தில் தேக்கு, மகாகனி, வேம்பு, குமிழ், செம்மரம், புங்கன், நாவல், மகிழம், பாதாம், புளி மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தேவைபடுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றுடன் கரூர் சின்ன தாதம்பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளகாம். மேலும் விவரங்களுக்கு 94429-17768, 812443-5025 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
Similar News
News September 21, 2025
கரூரில் 6பேர் போலீசாரால் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அண்ணாநகர் சீத்தக்காடு பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார் ஜெகன் 31, ரஞ்சித்குமார் 29, கார்த்திகேயன் 42, சந்தானம் 40, ஆறுமுகம் 42, அரவிந்த் கார்த்திக் 23 ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.1230 பறிமுதல் செய்தனர்.
News September 21, 2025
கரூர்: +2 போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

கரூர் மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <
News September 21, 2025
மண்மங்கலம் அதிமுக ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து, கரூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.