News September 21, 2025
ஆங்கிலேய கல்வி முறை தொடர்வது வேதனை: கவர்னர்

2014-ல் மோடி PM ஆனதும் புதிய இந்தியா பிறந்ததாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியாளர்களுக்கு பாக்.,கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை எனவும், ஆன்மிகம் தான் இந்த தேசத்தின் ஆன்மா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தை அழித்ததாகவும், சுதந்திரத்திற்கு பிறகும் அவர்களது கல்வி முறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
முதல்முறை குடிச்சப்போ முடியல: பாபநாசம் நடிகை

தான் முதல்முறையாக மது அருந்தியபோது தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நடிகை எஸ்தர் அனில் கூறியுள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த இவரை, கடைசியாக ‘மின்மினி’ படத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தனது மது பழக்கம் குறித்து மனம் திறந்த அவர், முதல்முறை குடித்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு நாள் முழுவதும் தூங்கியதாகவும், அதன்பின் குடியை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

➤<
News September 21, 2025
ஹேப்பி பர்த்டே ‘The Universe Boss’ கிறிஸ் கெயில்!

எந்த பவுலராக இருந்தாலும், இவர் பேட்டிங்கிற்கு வந்தால், சற்று நடுங்குவார்கள். ‘The Universe Boss’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் கிறிஸ் கெயிலுக்கு இன்று பிறந்தநாள். IPL-ல் இவரின் ருத்ரதாண்டவத்தில் கவரப்படாத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தாலும், கிரவுண்டில் சேட்டைகள் செய்வதிலும் கெட்டிக்காரர். இன்று வரை IPL-ல் அதிகபட்ச ஸ்கோர்(175*) இவர் வசம்தான்!