News September 21, 2025

இன்று IND vs PAK: வெற்றி யாருக்கு?

image

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் போனது, தொடரை விட்டு வெளியேறுவோம் என பாக்., மிரட்டியது என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. லீக் போட்டியில் தோற்றதற்கு பாக்., பழிதீர்க்குமா அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Similar News

News September 21, 2025

ஹேப்பி பர்த்டே ‘The Universe Boss’ கிறிஸ் கெயில்!

image

எந்த பவுலராக இருந்தாலும், இவர் பேட்டிங்கிற்கு வந்தால், சற்று நடுங்குவார்கள். ‘The Universe Boss’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் கிறிஸ் கெயிலுக்கு இன்று பிறந்தநாள். IPL-ல் இவரின் ருத்ரதாண்டவத்தில் கவரப்படாத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தாலும், கிரவுண்டில் சேட்டைகள் செய்வதிலும் கெட்டிக்காரர். இன்று வரை IPL-ல் அதிகபட்ச ஸ்கோர்(175*) இவர் வசம்தான்!

News September 21, 2025

BREAKING: மாலையில் அறிவிக்க போகிறார் மோடி

image

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி சற்றுமுன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், அது குறித்தும், H-1B விசா கட்டண உயர்வு குறித்தும் பேச அதிக வாய்ப்புள்ளது. இதை தவிர அவரது உரையில் முக்கிய அறிவிப்பு இடம்பெறும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது கமெண்ட் பண்ணுங்க.

News September 21, 2025

EPS – நயினார் சந்திப்பு: பின்னணி என்ன?

image

சேலத்தில், EPS-ஐ அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை EPS சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், KP ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அக்.1 முதல் நயினார் தனது பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!