News September 21, 2025

திறமையின் அடையாளம் மோகன்லால்: PM மோடி

image

தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள மோகன்லாலை PM மோடி வாழ்த்தியுள்ளார். திறமையின் அடையாளமாக திகழும் மோகன்லால், பல தசாப்தங்களாக தனது தனித்துவமிக்க கலைத்திறனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி கேரளாவின் அடையாளமாக உருவெடுத்துள்ளதாகவும், அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக அமைய வாழ்த்துவதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

Similar News

News September 21, 2025

இதை செய்ய உங்கள் நாள் சிறப்பாகும்

image

நமது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காலை எழுந்தவுடன் அதை நாம் எவ்வாறு அணுகுகிறோமோ அதை வைத்தே அன்றைய பொழுதானது நல்லதொரு பொழுதாக அமைகிறது. அப்படி எழுந்தவுடன் அவசியம் செய்ய வேண்டிய சில பழக்கங்களை மேலே புகைப்படங்களில் பார்க்கலாம்.

News September 21, 2025

GST 2.0 என்பது ஒரு புரட்சி: நிர்மலா சீதாராமன்

image

GST 2.0 என்பது சீர்திருத்தம் அல்ல, புரட்சி என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், தீப்பெட்டி தொழிலில் அச்சாணிகளாக பெண்கள் திகழ்வதால், அவர்களின் நலன்களுக்காக திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 375 பொருள்களுக்கு 10% GST வரியை குறைத்து, PM மோடி சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

2027-ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை

image

மும்பை – அகமதாபாத் இடையே 2027 டிசம்பரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வருகையின் மூலம், 9 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் எனவும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!