News September 20, 2025
ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தொடர்கிறது

உடல்நலக் குறைவால் உயிரிழந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அவரது பேரனுக்கு இன்று மதுரையில் காதணி விழா நடக்க இருந்ததுதான். தடபுடலாய் இன்று நடந்திருக்க வேண்டிய விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தற்போது வரை தொடர்கிறது. SO SAD.
Similar News
News September 21, 2025
வரலாற்று சாதனை படைத்த ‘லோகா’!

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி 23 நாள்களில் உலகம் முழுவதும் ₹267 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மோகன்லால் நடித்த ‘L2 : எம்புரான்’ ₹265 கோடி வசூலித்ததே சாதனையாக கருதப்பட்டது. மோகன்லால், மம்முட்டி என பெரிய ஸ்டார்கள் இருக்க, ஒரு ஹீரோயின் முதன்மை கேரக்டரில் நடித்த படம், இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது.
News September 21, 2025
ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.
News September 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 465 ▶குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. ▶பொருள்: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.