News September 20, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (செப்.20) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Similar News

News September 20, 2025

செப்.30: அறிவித்தார் கோவை கலெக்டர்!

image

கோவை கலெக்டர் பவன் குமார் இன்று விடுத்த செய்தி குறிப்பில் கோவை ஐடிஐ-யில் பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க வரும் செப்.30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 88254-34331, 91235-24155, 79042-71022, 73732-7893 என்ற எண்களை தொடர்பு கொள்ள அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 20, 2025

கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

image

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!