News September 20, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.
Similar News
News September 21, 2025
இதுதான் இந்தியாவின் ஒரே எதிரி: PM மோடி

பிற நாடுகளை சார்ந்து இருப்பதுதான் இந்தியாவின் ஒரே எதிரி என PM மோடி தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை பிறநாடுகளின் கைகளில் ஒப்படைக்க முடியாது, சுயசார்பை அடைவதுதான் இதற்கான ஒரே மருந்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் H1B விசாவிற்கான கட்டணத்தை 2 மடங்காக டிரம்ப் உயர்த்தியதற்கு மத்தியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
டிராமாவை தொடங்கிய பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. இதற்கு முன்னதாக, நேற்று இருநாட்டு கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் சென்றது போல், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. முன்னதாக, நடுவரை மாற்றினால் தான் விளையாடுவேன் என டிராமா செய்து, UAE உடனான போட்டியை தாமதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
News September 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 21, புரட்டாசி 5 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.