News September 20, 2025
TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.
Similar News
News September 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 21, புரட்டாசி 5 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News September 21, 2025
அலாரத்தை Snooze செய்தால் இந்த பிரச்சனை வரும்

ஒரு மனிதனின் சராசரி தூக்க சுழற்சி நேரம் 40 நிமிடங்கள். காலை நேரங்களில் நாம் கண் விழிப்பதற்கு, நமது மூளை நம்மை தயார் செய்து வைத்திருக்கும். ஆனால், snooze செய்துவிட்டு தூங்கும்போது, நாம் 80 நிமிட தூக்கத்திற்கு செல்லப் போகிறோம் என மூளை நம்பிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அது நம்மை மீண்டும் 5 நிமிடத்தில் கண்விழிக்க விடாது. இதனால், நாள் முழுவதும் சோம்பலையே உண்டாக்கும்.
News September 21, 2025
மோகன்லால் எனும் கலைஞன்.. ஒரு ஆண்டில் 34 படங்கள்!

சினிமாவில் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு <<17779255>>மோகன்லால்<<>> தேர்வாகியுள்ளார். 1978-ல் ‘திரனோட்டம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 1986-ம் ஆண்டில் மட்டும் 34 படங்களில் நடித்துள்ளார். 2001-ல் பத்ம ஸ்ரீ, 2019-ல் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இதுபோக, 2 தேசிய விருதுகள், 9 கேரள மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். உங்களுக்கு பிடித்த மோகன்லால் படங்களை கமெண்ட் பண்ணுங்க.