News September 20, 2025
விஜய் பரப்புரையின் மாஸ் போட்டோஸ்

நாகை மற்றும் திருவாரூரில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். இதில் இளைஞர்களே பரவலாக கலந்துகொண்டனர். பாஜகவை ஓரிரு வரிகளிலே விமர்சித்த விஜய், திமுகவை சரமாரியாக விளாசினார். தற்போது இதற்கு ஆளும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பரப்புரையின் HD போட்டோஸை மேலே swipe செய்து பாருங்கள்.
Similar News
News September 21, 2025
டிராமாவை தொடங்கிய பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. இதற்கு முன்னதாக, நேற்று இருநாட்டு கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் சென்றது போல், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. முன்னதாக, நடுவரை மாற்றினால் தான் விளையாடுவேன் என டிராமா செய்து, UAE உடனான போட்டியை தாமதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
News September 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 21, புரட்டாசி 5 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News September 21, 2025
அலாரத்தை Snooze செய்தால் இந்த பிரச்சனை வரும்

ஒரு மனிதனின் சராசரி தூக்க சுழற்சி நேரம் 40 நிமிடங்கள். காலை நேரங்களில் நாம் கண் விழிப்பதற்கு, நமது மூளை நம்மை தயார் செய்து வைத்திருக்கும். ஆனால், snooze செய்துவிட்டு தூங்கும்போது, நாம் 80 நிமிட தூக்கத்திற்கு செல்லப் போகிறோம் என மூளை நம்பிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அது நம்மை மீண்டும் 5 நிமிடத்தில் கண்விழிக்க விடாது. இதனால், நாள் முழுவதும் சோம்பலையே உண்டாக்கும்.