News September 20, 2025
கரூரில் இலவசம் அறிவித்தார் கலெக்டர்!

கரூரில் டிகிரி முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட்., கும்பகோணம் அவர்களின் ஒத்துழைப்புடன் தொழில்பழகுனர் பயிற்சி வாரியம் (தென்மண்டலம்) இணைந்து இணைய தளம் மூலமாக தகுதியான நபர்கள் https://nats.education.gov. in என்ற இணையதளம் மூலமாக 18.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
நெரூரில் லாரி மோதி முதியவர் படுகாயம்!

கரூர்: மண்மங்கலம் ஒன்றியம் நெரூர் ஊராட்சி அரங்கநாதன் பேட்டையில் ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தை முந்தி சென்று போது திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரியின் மோதியதில் ரங்கசாமி (70)கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 21, 2025
கரூர் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று!

கரூர் மாவட்டத்தில் தேக்கு, மகாகனி, வேம்பு, குமிழ், செம்மரம், புங்கன், நாவல், மகிழம், பாதாம், புளி மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தேவைபடுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றுடன் கரூர் சின்ன தாதம்பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளகாம். மேலும் விவரங்களுக்கு 94429-17768, 812443-5025 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
News September 20, 2025
கரூர்: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

கரூர் மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…(SHARE பண்ணுங்க)