News September 20, 2025
பூமிக்கு இரண்டு நிலவுகளா? 60 ஆண்டு மர்மம்

சுமார் 60 ஆண்டுகளாக 2025 PN7 எனும் சிறுகோள் பூமியை பின் தொடர்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனை, Earth’s Hidden Moon என அழைக்கும் விஞ்ஞானிகள், இது பூமியுடன் இணைந்து சூரியனை சுற்றுவதாக தெரிவித்துள்ளனர். அளவில் மிகவும் சிறிதாக இருப்பதால் இந்த சிறுகோள் டெலஸ்கோப்களில் மட்டும் தான் தென்படுமாம். இதனால் தான் 60 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் இருந்திருக்கிறது. SHARE.
Similar News
News September 21, 2025
நயன்தாராவுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வருது? சீமான்

விஜய்யை பார்க்க ஆட்கள் கூடுவார்கள், ஆனால் அவர் பேசுவதை கேட்க கூடமாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளாக கோட்பாடு கொண்ட ஒரு கட்சியை சினிமா கவர்ச்சியால் தகர்க்க முடியாது என்றும் வலுவான கொள்கை கோட்பாடு கொண்ட தமிழ் தேசியத்தால் மட்டுமே திராவிடத்தை வெல்ல முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், நயன்தாரா, வடிவேலு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.
News September 20, 2025
ராசி பலன்கள் (21.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 20, 2025
விவசாயிகள் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன்: விஜய்

நெல் கொள்முதலில் திமுக அரசு கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் பேசிய அவர், ஒரு நெல் மூட்டைக்கு ₹40 கமிஷன் அடித்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார். 40-40 தொகுதி வெற்றி என கணக்கு போட்ட திமுக, தற்போது விவசாயிகளின் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன் பெறுவதாகவும் ஆவேசமாக பேசினார்.