News September 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. பயனர்களின் வங்கி கணக்கிற்கு சோதனை முயற்சியாக ₹1 மட்டும் அனுப்பி, அந்த பணம் சரியாக செல்கிறதா என அரசு சார்பில் சோதிக்கப்பட்டு வருகிறதாம். திடீரென உங்கள் வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்டால் அது இந்த சரிபார்ப்புக்கான நடவடிக்கைதான். யாருக்கேனும் ₹1 வந்ததா?
Similar News
News September 20, 2025
இந்த க்யூட் குழந்தையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

‘போற போக்க பார்த்தா உங்கள எனக்கு பிடிச்சிரும் போலருக்கே’ என்று ‘வீரம்’ படத்தில் க்யூட்டாக பேசியிருப்பார் யுவினா. இவர் தற்போது ‘ரைட்’ என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், ‘நமக்குதான் வயசாகிடுச்சு போலயே’ என்று கண்ணீர் விடுகின்றனர். இந்நிலையில், குழந்தையாகவும் ஜோடியாகவும் ரஜினியுடன் மீனா நடித்தது போல், தான் அஜித்துடன் நடிக்க முடியாது என்று யுவினா கூறியுள்ளார்.
News September 20, 2025
ரசிகர் கூட்டம் குற்றச்சாட்டுக்கு விஜய் பதிலடி

விஜய்க்கு கூடுவது ரசிகர் கூட்டம் என்றும், அந்த கூட்டம் வாக்காக மாறாது என்றும் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், இது சும்மா கூடிய கூட்டமல்ல, வாக்களிக்கும் கூட்டம் தான் என்று தொண்டர்களின் கோஷத்தை பதிலடியாக கொடுத்திருக்கிறார் விஜய். திருவாரூர் பரப்புரையில் பேசிய அவர், குடும்ப ஆதிக்கம் இல்லாத, ஊழலில்லாத தமிழகத்தை நோக்கியே நமது பயணம் என்றும் சூளுரைத்தார்.
News September 20, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.