News September 20, 2025

108 ஆம்புலன்ஸ் மூலம் 73 ஆயிரம் பேர் பயன் தகவல்!

image

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கடந்த எட்டு மாதங்களில் விபத்து மற்றும் நாய் கடி, பாம்பு கடி, பிரசவ வலி, உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டு மாதத்தில் 73 ஆயிரத்து 716 பேர் பயனடைந்துள்ளனர். என சேலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 20, 2025

சேலம்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

சேலம் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI<<>> என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க!

News September 20, 2025

பைனான்ஸ் நிறுவன சொத்துக்கள் பொது ஏலம்!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் வரும் செப்.24- ஆம் தேதி காலை 10.30 மணி யளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள மகிழம் கூட்ட அரங்கத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் ஆட்சியர் அலுவலகம் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News September 20, 2025

சேலம்: சிறப்பு மருத்துவ முகாம்களில் 9,552 பேர் பயன்!

image

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 மருத்துவ முகாம்களில் 4,325 ஆண்களும், 5,227 பெண்களும் என மொத்தம் 9,552 பேர் கலந்து கொண்டு பயன்பெற்று உள்ளனர். இதில் 7,427 பேருக்கு இரத்தப் பரிசோதனையும். 5,603 பேருக்கு இசிஜி பரிசோதனையும், 1,040 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 1,143 பேருக்கு எக்கோ பரிசோதனையும், 787 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்.

error: Content is protected !!