News September 20, 2025

விழுப்புரம்: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

விழுப்புரம் மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <> கிளிக் <<>> செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

image

முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாகப் பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி முன்னிலையில், புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது. இவ்விழாவில், ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்புரையாற்றினர்.

News September 20, 2025

ராமதாஸ் தனித்துப் போட்டி – இரண்டாக உடையும் பாமக

image

சமீபத்தில் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் தனித்துப் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அரசியல் நகர்வுகள் தமிழக தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 20, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோதரர்கள்: பொன்முடி அஞ்சலி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே (வெள்ளிக்கிழமை) நேற்று வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த கொங்கராயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

error: Content is protected !!