News September 20, 2025

காரைக்குடி டூ மைசூர் இனிமே சுலபமா போலாம்

image

காரைக்குடி வண்டி : 06244 காரைக்குடி – மைசூர் சிறப்பு ரயில் நாளை 21.9.2025 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.
காரைக்குடியிலிருந்து மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு திருச்சி, நாமக்கல், பெங்களூரூ வழியாக திங்கள் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த நேர அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Similar News

News September 20, 2025

சிவகங்கை சேவை மையத்தில் பணிபுரிய அழைப்பு..!

image

சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாகவுள்ள 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து வருகின்ற 26.9.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவுறுத்தியுள்ளார்.

News September 20, 2025

சிவகங்கை: கிராம வங்கியில் 489 காலியிடங்கள்!

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நாளைக்குள் (செப். 21) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். மாத சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

சிவகங்கை: கடனை கட்ட முடியாமல் விரக்தியில் தீக்குளிப்பு

image

வடக்கு சாலைக்கிராமம் வேலு மகன் சந்திரசேகரன்36, இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சந்திரசேகர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் கடன் பெற்று அதற்கும் கடந்த 3 மாதங்களாக தவணை கட்டாமல் இருந்துள்ளார்.வாங்கிய கடனை கட்ட முடியாத விரக்தியில் சாலைகிராமம் போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!