News September 20, 2025
திருச்சி: அரசு பேருந்துகள் ஜப்தி

திருச்சி, திருவெள்ளரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளதாக பாதிக்கப்பட்டவரின் தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கார்த்திகா, அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
Similar News
News September 20, 2025
திருச்சியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாரதியார் சாலை பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை அருகே பரத்குமார், சம்போ சிங் ஆகிய இருவர் சட்டவிரோதமாக நின்று கொண்டு, விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.12,500 மதிப்புள்ள 1.250 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
News September 20, 2025
JUST IN: திருச்சி வரும் தவெக தலைவர் விஜய் !

தவெக தலைவர் விஜய் இன்று (செப்.20) தனது 2-ம் வார பரப்புரை சுற்றுப்பயணத்தை நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை 9.15 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை நோக்கி செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!
News September 20, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <