News September 20, 2025
அரியலூர் மாவட்டத்தில் இப்படி ஓர் இடமா ?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 20, 2025
அரியலூரில் காவல் வாகன மாதாந்திர ஆய்வு

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S. இன்று காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரகுபதி , காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 20, 2025
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

அரியலூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட நாகை மக்களே இதனை LIKE& SHARE பண்ணுங்க.
News September 20, 2025
ஆட்சியர் தலைமையில் விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் தயாரித்த உணவுப் பொருட்கள் கண்காட்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.