News September 20, 2025
கூடுதல் தொகுதிகள் கேட்கும் திமுக கூட்டணி கட்சிகள்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இதனால், 2021-ல் 25 இடங்களில் போட்டியிட்ட காங்., இந்தமுறை கூடுதலாக 10 இடங்கள் கேட்க முடிவெடுத்துள்ளதாம். அதேபோல், விசிக, 2 பொதுத்தொகுதி உட்பட 10, இரு கம்யூ., கட்சிகளும் தலா 10 இடங்களிலும் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாம். இதனால், திமுக போட்டியிடும் இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 20, 2025
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, செப்.27 முதல் அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.
News September 20, 2025
அரசியலில் ஓய்வு பெறும் வயது உண்டா?

அரசியலிலிருந்து சிலர் ஓய்வு பெற வேண்டியுள்ளதால், தான் ஓய்வு நாளில் (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்வதாக விஜய் கூறியிருந்தார். ஏற்கெனவே, 75 வயதை கடந்தவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு RSS-ல் உள்ளது. ஆனால், இந்தியாவில் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் வயது என்ற வரைமுறை இல்லை. அதிக வயதில் அரசியலில் பயணித்தவர்கள், பயணிப்பவர்கள் யாரெல்லாம் என்று மேலே உள்ள படங்களை swipe செய்து பாருங்கள்.
News September 20, 2025
63 வயது பாட்டிக்கும் 31 வயது இளைஞருக்கும் கல்யாணம்❤️❤️

63 வயதான அசாரஷி என்பவர், 31 வயது இளைஞரை கரம்பிடித்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான அந்த பெண்ணுக்கு 37 வயதில் மகன் இருக்கிறாராம். காஃபி ஷாப்பில் எதேச்சையாக சந்தித்த இருவருக்கும் இடையே நட்பு உருவாகி, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. அசாரஷியின் வயதை அறிந்தும்கூட அந்த இளைஞர் கரம்பிடித்துள்ளார். காதல் ஜோடிக்கு லைக் செய்து நீங்களும் வாழ்த்துங்கள்!