News September 20, 2025

விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 20, 2025

ராமதாஸ் தனித்துப் போட்டி – இரண்டாக உடையும் பாமக

image

சமீபத்தில் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் தனித்துப் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அரசியல் நகர்வுகள் தமிழக தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 20, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோதரர்கள்: பொன்முடி அஞ்சலி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே (வெள்ளிக்கிழமை) நேற்று வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த கொங்கராயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

News September 20, 2025

விழுப்புரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!