News September 20, 2025
இந்தியாவுக்கு பின்னடைவு: அக்சர் படேலுக்கு காயம்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ரசிகர்கள் இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அக்சர் படேல் காயமடைந்துள்ளார். ஓமனுக்கு எதிரான பீல்டிங்கின் போது, அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், மாற்று வீரராக சுந்தர்(அ) பராக் அணியில் இணைக்கப்படலாம் எனப்படுகிறது.
Similar News
News September 20, 2025
துயரத்திலும் கடமை தவறாத துனித் வெல்லாலகே

சமீபத்தில் தந்தையை இழந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணிக்காக செய்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு அவர், சூப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கு துபாய் திரும்பியுள்ளார். சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளும் நிலையில், துனித் வெல்லாலகே போட்டிக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
News September 20, 2025
இந்தியாவில் பலவீனமான PM உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம் என்று கடுமையாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதேபோல், நாட்டை பாதுகாப்பதில் தான் வெளியுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கார்கேயும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News September 20, 2025
வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்

உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி (Archery Premier league) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த லீக்கின் விளம்பர தூதராக ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் மேடை வரை ஏறியதால் ராம் சரண் சர்வதேச ரசிகர்களையும் கொண்டுள்ளார். தன்னை விளம்பர தூதராக நியமித்ததற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறி ராம் சரண் நெகிழ்ந்துள்ளார்.