News September 20, 2025

பெரம்பலூர்: லாரி கவிழ்ந்து விபத்து

image

பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் துறைமங்கலம் சாலையில் அதிகமாக கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் துறையூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தப் பகுதியில் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கு மாற்று பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.

Similar News

News September 20, 2025

Breaking: பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்

image

தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை தொடங்குவதாக விஜய் அறிவித்த நிலையில் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று (செப்.,20) நாகையில் நடந்த பரப்புரையில் விஜய் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

News September 20, 2025

பெரம்பலூர்: 10-ஆம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ஒருவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 30 ஆண்டுகளாக போலி ஆங்கில மருத்துவராக செயல்பட்டு வந்தவரை பெரம்பலூர் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது கைது செய்த அவரிடம் இருந்து மருத்துவம் பார்த்த உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 20, 2025

பெரம்பலூர்: B.E./ B.Tech போதும் ரூ.50,000 சம்பளம்!

image

பெரம்பலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்து Register பண்ணுங்க! கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!