News September 20, 2025
விருதுநகர்: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

விருதுநகர் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
Similar News
News November 6, 2025
விருதுநகர்: கைதியை தப்ப விட்ட 3 போலீசார் சஸ்பென்ட்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன்(42). இவர் மீது பந்தல்குடி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ள நிலையில் கேரளா சிறையில் இருந்த அவரை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று போலீசார் மீண்டும் கேரளா சிறைக்கு கொண்டு சென்ற போது அவர் தப்பி ஓடினார். இதனையடுத்து அந்த 3 போலீசாரையும் எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
News November 6, 2025
விருதுநகர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
விருதுநகர்: மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அக்.31 அன்று கோட்டைப்பட்டியில் முயல் வேட்டைக்கு சென்ற சுரேஷ் (45), இதேபோல் வேப்பிலைப்பட்டியில் மாயமான ரவிக்குமார் (40), சுரேஷ்குமார் (38), மின்வேலியில் சிக்கி பலியான நிலையில் சட்டவிரோத மின்வேலி அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


