News April 12, 2024

கடலூரில் உறுதிமொழி

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. சாதி வேறுபாடுகள் கலைந்து சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News

News November 6, 2025

கடலூர்: டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூரைச் சேர்ந்தவர் டிரைவர் சிவகுமார் (55). இவர் கடந்த வாரம் மைசூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் உள்ள தனது அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் சிவக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 31.4 மில்லி மீட்டர், சிதம்பரம் 26.8 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 17 மில்லி மீட்டர், விருத்தாசலம் 14 மில்லி மீட்டர், புவனகிரி 7 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 4.8 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 117.55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 6, 2025

இடை நின்ற 1,671 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது. 16 வட்டாரங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பில் 1671 மாணவர்கள் இடை நின்றது கண்டறியப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியின் முக்கியத்துவத்தை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!