News September 20, 2025

திருவள்ளூர்: புரட்டாசி முதல் சனி… இதை மறக்காம பண்ணிருங்க!

image

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. திருப்பத்தூர் ஸ்ரீ வீரராகவபெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

Similar News

News September 20, 2025

திருவள்ளூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் . இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

திருவள்ளூரில் 271 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது

image

திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே, இன்று (செப் -20)போக்குவரத்து சோதனை செய்தபோது சந்தேக நபர்களை சக்கர வாகனத்தில் தடுத்து விசாரித்ததில் சட்டவிரோதமாக சுமார் 271 கிலோ குட்கா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

News September 20, 2025

திருவள்ளூர்: வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

image

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், பொன்னேரி சார் ஆட்சியார், வருவாய் கோட்டாட்சியர், துணைஆட்சியர் என பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!