News September 20, 2025
உதயசூரியன், இரட்டை இலையால் பறிபோன கட்சிகள்

6 ஆண்டுகளாக தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை EC ரத்து செய்துள்ளது. திமுகவின் உதயசூரியன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளான ஈஸ்வரனின் கொமதேக, ஜவாஹிருல்லாவின் மமக, தமிமுன் அன்சாரியின் மஜக, ஜான்பாண்டியனின் தமமுக அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் இவர்களின் நிலைபாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News September 20, 2025
வெளிநாட்டில் முதலீடு செய்கிறாரா CM? விஜய்

இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என பிரித்து பேசுவதற்கு பாசிச பாஜக அல்ல என்ற விஜய், சொந்த குடும்ப வளர்ச்சியும், சொந்த சுயநலமும் தான் முக்கியம் என்று திமுக உள்ளது என விளாசினார். நாகை பரப்புரையில் பேசிய அவர், நாகைக்கு தேவையான எதுவும் கொண்டு வராமல், வெளிநாட்டுக்கு CM டூர் செல்கிறார் என விமர்சித்தார். மேலும், அது வெளிநாட்டு முதலீடா? (அ) வெளிநாட்டில் முதலீடா என்றும் கடுமையாக சாடினார்.
News September 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. பயனர்களின் வங்கி கணக்கிற்கு சோதனை முயற்சியாக ₹1 மட்டும் அனுப்பி, அந்த பணம் சரியாக செல்கிறதா என அரசு சார்பில் சோதிக்கப்பட்டு வருகிறதாம். திடீரென உங்கள் வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்டால் அது இந்த சரிபார்ப்புக்கான நடவடிக்கைதான். யாருக்கேனும் ₹1 வந்ததா?
News September 20, 2025
Pak-க்கு ஷாக்.. மீண்டும் நடுவராகும் ஃபைகிராஃப்ட் !

நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தான் தர்மசங்கடமான சூழலை எதிர்கொண்டுள்ளது. கைகுலுக்கல் விவகாரத்தில் நீக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்திய அம்பயரான ஆண்டி பைகிராஃப்ட்தான் நாளைய போட்டியில் நடுவராக செயல்படவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. இப்போது, என்ன பண்ண போகிறது பாகிஸ்தான் அணி என இந்திய நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.