News September 20, 2025
சேலம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
சேலம்: சிறப்பு மருத்துவ முகாம்களில் 9,552 பேர் பயன்!

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 மருத்துவ முகாம்களில் 4,325 ஆண்களும், 5,227 பெண்களும் என மொத்தம் 9,552 பேர் கலந்து கொண்டு பயன்பெற்று உள்ளனர். இதில் 7,427 பேருக்கு இரத்தப் பரிசோதனையும். 5,603 பேருக்கு இசிஜி பரிசோதனையும், 1,040 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 1,143 பேருக்கு எக்கோ பரிசோதனையும், 787 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்.
News September 20, 2025
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 88 பேருக்கு பணி!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 33 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வுச் செய்தனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 88 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நிலைத்தேர்வுக்காக 44 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநர் மணி செய்திருந்தார்.
News September 20, 2025
108 ஆம்புலன்ஸ் மூலம் 73 ஆயிரம் பேர் பயன் தகவல்!

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கடந்த எட்டு மாதங்களில் விபத்து மற்றும் நாய் கடி, பாம்பு கடி, பிரசவ வலி, உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டு மாதத்தில் 73 ஆயிரத்து 716 பேர் பயனடைந்துள்ளனர். என சேலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.