News September 20, 2025
திருவள்ளூர்: அதிமுக முக்கிய நிர்வாகி காலமானார்

திருத்தணி நகரம் 16வது வார்டு ஜோதிநகர் அதிமுக கழக முன்னாள் மாவட்ட பிரதிநிதி S.ஆனந்தன் இன்று (செப்.20) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திருத்தணியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 20, 2025
திருவள்ளூரில் 271 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது

திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே, இன்று (செப் -20)போக்குவரத்து சோதனை செய்தபோது சந்தேக நபர்களை சக்கர வாகனத்தில் தடுத்து விசாரித்ததில் சட்டவிரோதமாக சுமார் 271 கிலோ குட்கா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
News September 20, 2025
திருவள்ளூர்: வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், பொன்னேரி சார் ஆட்சியார், வருவாய் கோட்டாட்சியர், துணைஆட்சியர் என பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News September 20, 2025
திருவள்ளூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.