News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 20, 2025
வீக்கென்ட் அரசியலுக்கு விளக்கம் கொடுத்த விஜய்

‘வீக்கென்ட் அரசியல்’ என்ற விமர்சனத்துக்கு விஜய் பதிலளித்துள்ளார். நாகையில் பேசிய அவர், யாருக்கும் இடையூறு இல்லாமல் இருப்பதற்கே சனிக்கிழமையை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார். மேலும், அரசியலில் பலருக்கு ஓய்வு கொடுக்க விரும்புவதால், ஓய்வு நாளில் பிரசாரம் செய்வதாகவும் விளக்கமளித்துள்ளார். 2026-ல் திமுக – தவெக இடையே தான் போட்டி என்று மீண்டும் கூறிய விஜய், நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
News September 20, 2025
மூணாறில் எங்கே போகலாம்?

மூணாறு பலரது பேவரைட் ஸ்பாட்டாக உள்ளது. மூணாறு செல்பவர்களுக்கு அதனை சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவை எந்த இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க இந்த இடங்களுக்கு போனீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க. இல்லைனா அடுத்தமுறை போகும்போது மிஸ் பண்ணாதீங்க.
News September 20, 2025
இந்தியாவுக்கு பெரிய எதிரிகளே இல்லை: PM மோடி

உலகில் இந்தியாவுக்கென பெரிய எதிரிகள் யாரும் இல்லை என குஜராத்தில் PM மோடி கூறியுள்ளார். மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது தான் நமது நாட்டின் பலவீனம் என தெரிவித்த அவர், மற்ற நாடுகளுக்கு முன் இது நமது சுயமரியாதையை சீர்குலைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.