News September 20, 2025
தனி விமானம் மூலம் நாகைக்கு பறந்தார் விஜய்

செப்.13-ல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினத்துக்கான பிரசாரத்தை மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாகைக்கு புறப்பட்டார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார். அரைமணிநேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
Similar News
News September 20, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் விஜய்

நாகையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், தனது முதற்கட்ட பரப்புரையின்போது பெரம்பலூர் செல்ல முடியாமல் போனது. அதற்காக பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்னை குறித்து பேச போனாலே, தவெகவுக்கு பல தடைகள் விதிக்கப்படுகிறது. என்ன ஸ்டாலின் சார்! மிரட்டி பாக்குறீங்களா?, இதற்கு எல்லாம் இந்த விஜய் அஞ்ச மாட்டான் என்றார்.
News September 20, 2025
நாளை மகாளய அமாவாசை: மறந்தும் இத செய்யாதீங்க!

நாளை மகாளய அமாவாசை தினம் வருகிறது. இந்நாளில் முன்னோர்கள் வழிபாடு, பித்ருக்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நாளில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளது *வாசலில் கோலம் போடக்கூடாது *மது, புகை பழக்கம் கூடாது *வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது *முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க எள்ளை கடன் வாங்கக்கூடாது *பூஜை அறையில் விளக்கேற்றக்கூடாது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
News September 20, 2025
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்த விஜய்

மீனவ நண்பனாக இருக்கும் இந்த விஜய்யின் அன்பு வணக்கங்கள் என்று நாகை புத்தூர் ரவுண்டனாவில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். இவர்கள் (திமுக) ஆண்டது பத்தாதா? என கேள்வி எழுப்பிய விஜய், நான் களத்திற்கு வருவது புதிது அல்ல என்றும் பேசினார். தமிழக மீனவர்களை தடுப்பது எப்போது நிற்கும்? தாய்ப்பாசம் கொடுத்த தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் ரொம்ப முக்கியம் என்றும் கூறினார்.