News September 20, 2025
திருப்பத்தூர்: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
திருப்பத்தூர்: மனைவியை கொன்ற கணவன் சரண்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூர் பகுதியில் வசிக்கும் திருக்குமரன் மனைவி நேற்று கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவரது கணவர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தான் தான் தனது மனைவி அறிவழகியை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News September 20, 2025
திருப்பத்தூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
சிறப்பு கல்வி மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.