News September 20, 2025
தென்காசி: கிராம உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 21-09-2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப் படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். SHARE IT.
Similar News
News September 20, 2025
தென்காசி: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை செப்-21 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை , வீராசாமி செட்டியார் கல்விக்குழுமம் வளாகம் , எஸ்.வி.எஸ் நகர் , புளியங்குடியில் வைத்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 10 , 12 , ஐ.டி , டிப்ளமோ , பி.இ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 9362863001 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 20, 2025
தென்காசி: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

தென்காசி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
News September 20, 2025
தென்காசி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <