News September 20, 2025
கரூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், வடகரை, காட்டாம்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, எலவனூர், புஞ்சை, நஞ்சை காளக்குறிச்சி, அணைப்புதூர், க.பரமத்தி, நெடுங்கூர், பூலாம்பட்டி, கார்வழி, தென்னிலை, மலைக்கோவிலூர், கனகாபுரி, நொய்யல், அத்திப்பாளையம், வடக்கு நொய்யல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News September 20, 2025
கரூர்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

கரூர் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2025 தேதிக்குள் <
News September 20, 2025
கரூரில் நூதன மோசடி..மக்களே உஷார்!

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.SHARE it
News September 20, 2025
கரூர்: மாதம் ரூ.22,000.. கனரா வங்கியில் பயிற்சி!

கரூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <