News September 20, 2025
சரும ஆரோக்கியத்துக்கு இந்த மூலிகை தேநீர் குடிங்க!

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மணத்தக்காளி கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *புதிய மணத்தக்காளி கீரையின் இலைகளை வெயிலில் நன்றாகக் காய வைக்கவும் *பிறகு, இந்த இலைகளை தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும் *அதனை, வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம் ➦எந்த ஒரு மூலிகை தேநீரை பருகுவதற்கு முன்னும், டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE IT.
Similar News
News September 20, 2025
10-வது போதும்.. ₹25,000 சம்பளத்தில் அரசு வேலை!

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 429 Loaders பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20- 40 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹15,000- ₹25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். முழு விவரங்களுக்கு <
News September 20, 2025
வங்கி வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

சேவை கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. பல கோடி மக்கள் வாழும் நாட்டில், வங்கிகளின் அதிக சேவை கட்டணத்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, டெபிட் கார்டு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு, தாமத பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான சேவை கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியது. ஆனால், அதற்கான வரம்பை RBI நிர்ணயிக்கவில்லை.
News September 20, 2025
BREAKING: விஜய் கூட்டத்திற்குள் புகுந்தது ஆம்புலன்ஸ்

நாகையில் தவெக தலைவர் விஜய் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தபோது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்துள்ளது. உடனே அக்கட்சியின் தொண்டர்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதேபோல் ஏற்கனெவே, விஜய் தனது முதல் பரப்புரையை திருச்சியில் மேற்கொண்டபோதும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்தது குறிப்பிடத்தக்கது.