News September 20, 2025
ஈரானில் அதிக சம்பளத்தில் வேலையா? உஷாரா இருங்க

ஈரான் அல்லது வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை, விசாவும் தேவையில்லை என ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய அரசு அலர்ட் கொடுத்துள்ளது. இப்படி அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், ஈரானில் இறங்கியதும், கிரிமினல் கேங்குகளால் கடத்தப்பட்டு, பணம் கொடுத்தால் தான் விடுவிப்பேன் என குடும்பத்தாரிடம் மிரட்டும் சம்பவங்கள் நடப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது.
Similar News
News September 20, 2025
ஏன் தான் டாக்டர்கள் கிறுக்குறாங்களோ!

இந்த சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கும். Prescription-ஐ பார்த்தால், என்ன எழுதி இருக்கிறார் என்றே புரியாது. இதனால், பல ஆபத்துகளும் ஏற்படலாம். *மருந்துகடையில் கடைக்காரர் மாத்திரையை மாற்றி கொடுக்கலாம் *மாத்திரையின் Dosage மாறலாம், எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பமும் ஏற்படலாம். எனவே, டாக்டர்கள் புரியும்படி, எழுதி கொடுப்பதே சாலச்சிறந்தது. இதனை விளையாட்டாக கருதாமல், அனைவருக்கும் பகிரவும்.
News September 20, 2025
நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.
News September 20, 2025
காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.