News September 20, 2025
திருவள்ளூரில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளில், 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுதும் 1,315 பள்ளிகளில், 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
திருவள்ளூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
திருவள்ளூர்: புரட்டாசி முதல் சனி… இதை மறக்காம பண்ணிருங்க!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. திருப்பத்தூர் ஸ்ரீ வீரராகவபெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
News September 20, 2025
திருவள்ளூர்: அதிமுக முக்கிய நிர்வாகி காலமானார்

திருத்தணி நகரம் 16வது வார்டு ஜோதிநகர் அதிமுக கழக முன்னாள் மாவட்ட பிரதிநிதி S.ஆனந்தன் இன்று (செப்.20) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திருத்தணியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.