News September 20, 2025
தேனியில் வெளியான அதிர்ச்சி தகவல்

கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் பகுதிகளில் கடந்த மாதம் இரு பெண்கள் உட்பட சில்லரை கஞ்சா வியாபாரிகள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி, கல்லுாரி பகுதி அருகே கைது செய்துள்ளனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கஞ்சா பொட்டலங்கள் ரூ. 75 முதல் ரூ.100க்கு விற்பனை செய்வதாகவும், மாணவர்கள் தான் பேரம் பேசாமல் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள்,’ என அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர்.
Similar News
News November 15, 2025
தேனி: ஆசிரியருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துராஜா (40) சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருக்கும் அதே பகுதி ராமகிருஷ்ணன் என்பவருக்கும் தோட்டம் பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று (நவ. 14) முத்துராஜா பள்ளி அருகே உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் கத்தியால் முத்துராஜாவை முதுகில் குத்தி உள்ளார். போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
News November 15, 2025
தேனி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

தேனி மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
போடி வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

போடி வணிக வரித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்லையா (59) என்பவர் 2013.ல் வியாபாரி ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது செல்லையா மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலக உதவி ஆய்வாளராக உள்ளார். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செல்லையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


