News April 12, 2024
மக்கள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

சூளகிரியை அடுத்த மேலுமலை பஞ்சாயத்து ஓட்டையப்பன் கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இதுநாள் வரை செய்து தரவில்லை என கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் இன்று(ஏப்ரல்.12) தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 9, 2025
கிருஷ்ணகிரி: குளியலறையில் கேமரா – அடுத்தடுத்து ஷாக்!

கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்த வழக்கில், டெல்லியில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் சிங் விசாரணையில், கேமரா வைத்தது தொடர்பாக அவரிடம் 2 நாள்கள் போலீஸார் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் அவர் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரிகிறது. பின்னர் அவர் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: MLA-களுக்கு பரந்த உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், ‘உடன்-பிறப்பே வா’ என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று (நவ.08) நடந்தது. இந்நிலையில், “ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகிகளில் திமுக வெற்றிபெற வேண்டும்”. என முதல்வர் மு.க.ஸ்டாலின் MLA-களுக்கு அறிவுறுத்தினார்..


