News September 20, 2025
செங்கல்பட்டு: ஆயுத பூஜைக்கு சிறப்பு ரயில்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் செப்.26ந்தேதி முதல் அக். 26ந்தேதி வரை நெல்லை – செங்கல்பட்டு – நெல்லை இடையே வண்டி எண் (06154 & 06153) வாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமையில் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று செப்.20 காலை 8 மணிக்கு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கவும், விபத்து நேரிடும் சூழலை தவிர்க்கவும் வாகனங்கள் இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
செங்கல்பட்டு: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
செங்கல்பட்டில் அரசு வேலை; ரூ.22,500 சம்பளம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாய வள பயிற்றுநருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதற்கு மொபைல் போன் செயலிகளை பயன்படுத்த தெரிந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.22,500 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். செம்ம வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.