News September 20, 2025
அரசு பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் கைது

துவரங்குறிசி அருகே கருமலை அடுத்த சின்னமணியங்குறிச்சி புளியந்தோப்பு அருகில் நேற்று மாலை டூவீலரில் சென்ற போதை ஆசாமிகள் அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி பிரச்சனை செய்துள்ளனர். இதுகுறித்து ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து எண்டபுளியைச் சேர்ந்த சிவா, சந்திரசேகரை இன்று புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 20, 2025
JUST IN: திருச்சி வரும் தவெக தலைவர் விஜய் !

தவெக தலைவர் விஜய் இன்று (செப்.20) தனது 2-ம் வார பரப்புரை சுற்றுப்பயணத்தை நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை 9.15 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை நோக்கி செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!
News September 20, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 20, 2025
திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சியில் இருந்து முசிறி நோக்கி ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையினை ஏற்றிக்கொண்டு திருச்சி – நாமக்கல் சாலையில் நேற்று சென்ற கனரக லாரி, வாத்தலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கனரக லாரியின் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.