News September 20, 2025
தமிழகம் தலைகுனிந்து நிற்க DMK தான் காரணம்: EPS

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று EPS பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசு ஹாஸ்பிடல்களின் நிலையை சுட்டிக்காட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைகளை பார்ப்பதைவிட மாரத்தான் ஓடுவதில் தான் குறியாக இருப்பதாக விமர்சித்தார். மேலும், இப்போது திடீரென தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என CM சொல்வதாகவும், ஆனால், 2ஜி ஊழலால் ஏற்கனவே தமிழகம் தலைகுனிந்துதான் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News September 20, 2025
தி.மலை: வங்கியில் ரூ.90,000 வரை சம்பளத்தில் வேலை

IBPS கிராம வங்கி தற்போது தமிழ்நாட்டிலும் office Assistant போன்ற பணிகளுக்கு 500க்கு மேல் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு 18 வயதுக்கு மேல் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் சம்பளம் 60,000 முதல் 90,000 வரை வழங்கப்பட இருக்கிறது. நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த<
News September 20, 2025
நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.
News September 20, 2025
காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.