News September 20, 2025

இலவச பயிற்சிக்கான கால அவகாசம் நீட்டிப்பு

image

நாமக்கல் அரசு ஐடிஐ இல் தொழிற்பிரிவுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சி காலத்தில் உதவித்தொகை, பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், மிதிவண்டி மற்றும் என்டிசி சான்றிதழ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் நேரில் அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’ <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க!

News November 4, 2025

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாகவும், கறிக்கோழி கிலோ ரூ.106 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News November 4, 2025

நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!